அஇஅதிமுக உயர்மட்டக் கூட்டம்: தேர்தல் களம் குறித்து ஆலோசனை

சென்னையில் அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அஇஅதிமுக தலைமை அலுவலகம்
அஇஅதிமுக தலைமை அலுவலகம்

சென்னையில் அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அடுத்த வருடம் தமிழ்நாடு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 

இதில் அஇஅதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில்  நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

அஇஅதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை நிலவி வந்த நிலையில் வரவுள்ள சட்டமன்றத் தேர்தல் களம் குறித்தும், பெங்களுரூ சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலையானால் அதனை ஒட்டிய அரசியல் நிலை, அஇஅதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஆகியவைக் குறித்து  இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக ஆலோசனைக் கூட்டம் தொடங்குவதற்கு முன் ’தமிழக நிரந்தர முதல்வர் எடப்பாடி பழனிசாமி’ எனவும், ”ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ்” எனவும் தொண்டர்களால் கோஷங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com