தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பேரறிவாளனுக்கு 30 நாள்கள் விடுப்பு வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாள்கள் விடுப்பு வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated On :24 செப்டம்பர் 2020, 6:16 am

DIN

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாள்கள் விடுப்பு வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அற்புதம்மாள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில்,  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக எனது மகன் பேரறிவாளன் சிறையில் இருந்து வருகிறான். தற்போது  என்னுடைய மகன் புழல் சிறையில் அடைப்பட்டுள்ளார். 

புழல் சிறையில் ஏற்கனவே 50 கைதிகள் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு உடல்நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் பேரறிவாளன், கரோனா நோய்த் தொற்றால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள்  நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பேரறிவாளனுக்கு 30 நாள்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டனர்.
 

அற்புதம்மாளின் மனுவை தமிழக அரசும் சிறைத் துறையும் நிராகரித்துவிட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் 30 நாள்கள் விடுப்பு வழங்கியுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெற்ற ஒரு வாரத்தில் பேரறிவாளனை பரோலில் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.