லோயர் கேம்பில் மின் உற்பத்தி நிலையத்தின் நான்கு மின்னாக்கிகள் இயங்கியது

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் நான்கு மின்னாக்கிகளும் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் மொத்தம் 168 மெகாவாட் மின்சார உற்பத்தி நடைபெற்று வருகிறது.
லோயர் கேம்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் நான்கு மின்னாக்கிகளும் இயக்கப்படுகின்றன.
லோயர் கேம்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் நான்கு மின்னாக்கிகளும் இயக்கப்படுகின்றன.

கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் நான்கு மின்னாக்கிகளும் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் மொத்தம் 168 மெகாவாட் மின்சார உற்பத்தி நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் நான்கு மின்னாக்கிகளில் 42 மெகாவாட் வீதம் மொத்தம் 168 மெகாவாட் மின்சார உற்பத்தி வெள்ளிக்கிழமை முதல் துவங்கியது.

அதே நேரத்தில் வியாழக்கிழமை, மூன்று மின்னாக்கிகளில் 42,42,42 எனவும் நான்காவது மின்னாக்கியில், 36 மெகாவாட் என மொத்தம் 162 மெகாவாட் மின்சார உற்பத்தி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தற்போது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு நொடிக்கு 1,700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அதன் மூலம் லோயர் கேம்பில் உள்ள நான்கு மின்னாக்கிகளில் அதன் முழு கொள்ளளவான 42 மெகாவாட்  உற்பத்தி நான்கு மின்னாக்கிகளிலும் இயக்கப்படுவதால், மொத்தம் 168 மெகாவாட் மின்சார உற்பத்தி நடைபெற்று வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நிலவரம்:
சனிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 131.55 அடி உயரமாகவும்,  அணையில் நீர் இருப்பு 5060 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.

அணைக்குள்  நீர்வரத்து நொடிக்கு 1,838 கன அடியாகவும், அணையில் இருந்து நீர் நொடிக்கு 1,700 கன அடியாகவும் இருந்தது.

பெரியாற்றில் 4.4 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 4.8 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com