தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கரோனா தொற்று உறுதி

​தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

News image

கோப்புப்படம்

Updated On :18 ஏப்ரல் 2020, 12:51 pm


தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. இன்று ஒரேநாளில் மட்டும் 82 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் 1.1 சதவீதமாகத் தொடர்கிறது.

இதுதவிர தமிழகத்தில் மேலும் 3 ஆய்வகங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளும் ஆய்வகங்கள் 31 ஆக அதிகரித்துள்ளன.

இன்றைக்குப் புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டதில் அதிகபட்சமாக திருப்பூரில் 28 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.