அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மணலியில் இருந்து நாளை ஹைதராபாத் எடுத்துச் செல்லப்படும் அம்மோனியம் நைட்ரேட்

சென்னை மணலியில் உள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட் கண்டெய்னர்களில் முதற்கட்டமாக 10 கண்டெய்னர்கள் பாதுகாப்புடன் நாளை ஹைதராபாத் எடுத்துச் செல்லப்படவுள்ளன. 

News image

கோப்புப்படம்

Updated On :9 ஆகஸ்ட் 2020, 5:55 am

சென்னை மணலியில் உள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட் கண்டெய்னர்களில் முதற்கட்டமாக 10 கண்டெய்னர்கள் நாளை ஹைதராபாத் எடுத்துச் செல்லப்படவுள்ளன. 

சென்னை மணலியில் உள்ள சரக்குப் பெட்டக மையத்தில் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் கடந்த 2015 செப்டம்பர் 27-ஆம் தேதியில் இருந்து 5 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்ரூட்டில் நடந்த விபத்தை அடுத்து, மணலியில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த மக்களிடையே கோரிக்கை எழுந்தது. அரசியல் தலைவர்களும் இதுகுறித்து வலியுறுத்தி இருந்தனர். 

இந்நிலையில், சுங்கத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் மணலியில் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருக்கும் இடத்தினை ஆய்வு செய்தனர். மேலும், அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது என்றும் அடுத்த 3 நாள்களில் இதனை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுங்கத் துறை உறுதியளித்தது. 

அதன்படி, நேற்று இதற்கான ஏலம் விடப்பட்ட நிலையில், ஹைதராபாத் நிறுவனம் ஒன்று 10 கன்டெய்னர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. இதையடுத்து, மொத்தமுள்ள 37 கண்டெய்னர்களில் 10 கண்டெய்னர்கள் நாளை ஹைதராபாத் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.