குடும்பச் சொத்துப் பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"பூர்வீக சொத்தில் சம பங்கினை பெண்கள் பெறலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டென 1989ம் ஆண்டே சட்டம் கொண்டு வந்த முத்தமிழறிஞர் கலைஞர் - திமுகவுக்கு கிடைத்த வெற்றி இது! உரிமை கொண்டவர்களாக பெண்ணினம் உயர அடித்தளம் அமைக்கும் தீர்ப்பு!" என்று குறிப்பிட்டுள்ளார் மு.க. ஸ்டாலின்.
2005-ஆம் ஆண்டு இந்து வாரிசு உரிமை சட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளது.