பாஜகவிலிருந்து விலகினார் ரஜினி கட்சி ஒருங்கிணைப்பாளர்

ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சி தொடங்கயிருப்பதாக நடிகர் ரஜினி அறிவித்திருக்கும் நிலையில், அவரது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று அறிவிக்கப்பட்ட அர்ஜூன் மூர்த்தி பாஜகவிலிருந்து விலகினார்.
பாஜகவிலிருந்து விலகினார் ரஜினி கட்சி ஒருங்கிணைப்பாளர்
பாஜகவிலிருந்து விலகினார் ரஜினி கட்சி ஒருங்கிணைப்பாளர்


சென்னை: ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சி தொடங்கயிருப்பதாக நடிகர் ரஜினி அறிவித்திருக்கும் நிலையில், அவரது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று அறிவிக்கப்பட்ட அர்ஜூன் மூர்த்தி பாஜகவிலிருந்து விலகினார்.

ரஜினி தொடங்கவிருக்கும் அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் அர்ஜூன் மூர்த்தி, பாஜகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக ராஜிநாமா கடிதம் அளித்துள்ளார்.

இது குறித்து பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,  தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் அர்ஜூன் மூர்த்தியுடைய ராஜிநாமாவை ஏற்று அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார்.

மேலும், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம், கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வரும் ஜனவரி மாதத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும், கட்சி தொடங்கும் தேதியை டிசம்பர் 31-ம் தேதி அறிவிக்கப் போவதாகவும் ரஜினி அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, தனது அரசியல் கட்சி மற்றும் தனது இலக்கு குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று அர்ஜூன் மூர்த்தியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அர்ஜூன் மூர்த்தி, முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தவர். முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு திமுகவிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தார்.  தற்போது பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராக பதவி வகித்து வந்த நிலையில், பாஜகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அர்ஜூன் மூர்த்தி ராஜிநாமா கடிதம் அளித்திருந்தார். அவரது ராஜிநாமா ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com