
கோப்புப்படம்
சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் மேலும் 79 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 183 ஆக உயர்ந்துளளது.
கரோனா பொது முடக்கத் தளா்வுகளில் ஒரு பகுதியாக டிசம்பா் 7-ஆம் தேதி முதல் கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு மாணவா்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கவும் விடுதிகள் செயல்படவும் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.
இதைத் தொடா்ந்து சென்னை ஐஐடியிலும் இறுதியாண்டு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் ஐஐடியில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஏற்கெனவே 104 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 79 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது.
இதையடுத்து மொத்த பாதிப்பு 183 ஆக அதிகரித்துள்ளது. சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஐடியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.