
கோப்புப்படம்
சென்னையில் வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலை ரூ. 50 உயர்ந்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக விலை மாற்றாமில்லாமல் விநியோகம் செய்யப்பட்டு வந்த சிலிண்டர் விலை டிசம்பர் மாத தொடக்கத்தில் ரூ. 50 உயர்த்தப்பட்டது. இதனால் சென்னையில் சிலிண்டர் விலை ரூ. 610-லிருந்து ரூ. 660 ஆக உயர்ந்தது.
இதைத் தொடர்ந்து ஒரேமாதத்தில் இரண்டாவது முறையாக இன்று மீண்டும் ரூ. 50 உயர்ந்து விலை ரூ. 710 ஆக அதிகரித்துள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை ஆகிவற்றைப் பொருத்து வீட்டு உபயோக சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் மாற்றியமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.