பொங்கல் பரிசு பற்றி பேசினேனா? பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை விளக்கம்

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகை குறித்து பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை கூறியதாக சில தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
பொங்கல் பரிசு பற்றி பேசினேனா? பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை விளக்கம்
பொங்கல் பரிசு பற்றி பேசினேனா? பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை விளக்கம்


சென்னை: தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகை குறித்து பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை கூறியதாக சில தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அதில், ரூ.2000க்காக ஐந்து ஆண்டுகளை அடகு வைத்து விடாதீர்கள் என்றும், கொள்ளையடித்த பணத்தை மக்களிடமே தேர்தல் நேரத்தில் ரூ.2000 கொடுப்பதுதான் தமிழக அரசியல் என்றும் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகை குறித்து அண்ணாமலை கருத்துக் கூறியிருந்ததாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அது உண்மையல்ல என்று அண்ணாமலை தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், சொல்லாததை சொல்லி, பிரச்னையை உருவாக்கி அதில் குளிர் காயலாம் என்பதுதான் இவர்கள் நினைப்பு.. இதற்குப் பெயர் நடுநிலை அல்ல.. கெடும் நிலை !

சில ஊடகங்கள், பொங்கலுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் மக்களுக்கு ரூபாய் 2500 கொடுக்க இருப்பதை நான் எதிர்ப்பதுபோல, கோயம்புத்தூரில் நான் சொன்னதாக,  தவறாக சித்தரித்து கூற முயற்சிக்கிறார்கள், அதை பிரசுரமும் செய்கிறார்கள்.

தேர்தல் நேரத்தில், 2000 ரூபாயை ஓட்டுக்காக கொடுப்பதை, அப்படிப்பட்ட அரசியலை பாஜக என்றும் விரும்பாது, அதை என்றும் செய்யாது என்று நான் கோயம்புத்தூரில் பேசியதை தவறாக சித்தரித்திருக்கிறார்கள். நான் கூறிய ஓட்டுக்காக கொடுக்கும் 2000 ரூபாயையும், பொங்கல் பரிசாக அரசாங்கம் வழங்கும் 2500 ரூபாயையும் ஜோடித்து, மக்களை குழப்பவும்  பெரும் முயற்சி செய்கின்றன சில ஊடகங்கள். உண்மை என்றும் புரிய வேண்டும், பொய்கள் யாவும் அழிய வேண்டும். வாழ்க,வளர்க தமிழ்நாடு என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com