
ராணிப்பேட்டை நகரில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.மயில்வாகனன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
ராணிப்பேட்டை, ஆற்காடு நகரங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு போதை பொருள் பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய பேரணி கிருஷ்ணகிரி டிரங்க் சாலை,ரயில்வே ஸடேசன் சாலை,எம்.எப்.சாலை,எம்.பி.டி.சாலை வழியாக சென்றனர்.