
கோப்புப்படம்
இந்திய-சீன எல்லையில் நடந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய - சீன எல்லையான லடாக்கில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே திங்கள்கிழமை இரவு நேரிட்ட மோதலில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதில், ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்கலூர் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து மகன் பழனி(40) என்ற ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். இந்த நிலையில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் தனது டிவிட்டரில், லடாக் எல்லைப் பகுதியில் சீன இராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் - கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழக வீரர் பழனி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
வீரமரணம் எய்திய பழனி அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்! இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...