சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 12 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கரோனா பரவலினால் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மேலும் சில மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, ஆர்.பி. உதயகுமார், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், டிஜிபி, தலைமைச் செயலர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போடியில் ஓ. பன்னீா்செல்வம் வாக்கு சேகரிப்பு

பழனி மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளரை ஆதரித்து எம்.பி. வெங்கடேசன் பிரசாரம்

தற்காப்புக் கலையில் உலக சாதனை

மானாமதுரை சித்திரை திருவிழா: மாவிளக்கு பூஜை உத்ஸவம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


