

சென்னையில் இன்று 1,956 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவுக்கு 3,645 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 3,523 பேர். வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 122 பேர்.
இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,956 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக விவரம்: இங்கே கிளிக் செய்யவும்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.