
கோப்புப்படம்
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இதுவரை இல்லாத அளவுக்கு 3,645 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் விவரத்தை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் புதிதாக 3,645 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 3,523 பேர். வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 122 பேர்.
இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,956 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய அறிவிப்பில் மேலும் 46 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 41,357 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைக்கு 33,675 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 10,42,649 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இன்றைய தேதியில் மொத்தம் 32,305 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு ஆய்வகங்கள் 47, தனியார் ஆய்வகங்கள் 42 என மொத்தம் 89 ஆய்வகங்கள் உள்ளன.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G