தமிழகத்தில் முழு ஊரடங்குக்கான கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு காலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு காலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு காலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் முழு ஊரடங்கு காலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

முழு ஊரடங்கு: 
 
5.7.2020, 12.7.2020, 19.7.2020 மற்றும் 26.7.2020 ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.  
 
திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கான கட்டுப்பாடுகள்: 
 

திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

  • இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.  

 
பொது பேருந்து போக்குவரத்து : 

மாநிலத்தில் மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 
தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து 1.7.2020 முதல் 15.7.2020 
வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. 
 
 இ-பாஸ் முறை : 
 

அந்தந்த மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும்.

  • வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும்,  இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
  • முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் இடங்களில் 30.6.2020 வரை வழங்கப்பட்ட இ-பாஸ் 5.7.2020 வரை செல்லும்.  இதற்கு மீண்டும் புதிய இ-பாஸ் பெறத் தேவை இல்லை. 
  • ஒரு மாவட்டத்திலிருந்து வேறொரு மாவட்டத்திற்கு அரசுப் பணிகளுக்கான ஒப்பந்தங்களில் பங்கேற்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும், அப்பணியை மேற்பார்வை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கும் மற்றும் இப்பணிகள் சம்பந்தமாக அரசு அதிகாரிகளை சந்திக்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களால் இ-பாஸ் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com