
சேலத்தில் வியாபாரி ஒருவர் முகக்கவசத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார்.
கரோனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசியப் பொருள்கள் தேவைக்காக வெளியில் வருபவா்கள் பாதுகாப்பான முகக்கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் வெளியில் வருபவா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வருகின்றனா். மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா், அரசு ஊழியா்கள், மாநகராட்சி பணியாளா்கள் என அனைத்து தரப்பினரும் முகக்கவசம் அணிந்தே பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இதனால் முகக்கவசத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. தற்போது, இதன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் முள்ளுவாடி பகுதியில் வியாபாரி ஒருவர் 10 முதல் 30 ரூபாய் விலைக்கு முகக்கவசத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...