
கோவை அரசு மருத்துவமனைக்கு 2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை சிஆர்ஐ நிறுவனம் வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறு குட்டியும் கலந்து கொண்டார்.
இதனை பெற்றுக் கொண்ட கோவை அரசு மருத்துவமனை கல்லூரி முதல்வர் அசோகன் செய்தியாளர் சந்திப்பு: உலகத்தை ஆட்டிப்படைக்கும் வைரஸ் தாக்கத்தை தடுக்க தமிழக அரசு பல்வேறு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கோவை அரசு மருத்துவமனைக்கு கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறு குட்டி தலைமையில் சிஆர்ஐ பம்பு நிறுவனம் மூலமாக 2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் முகக்கவசம், சனிடைசர் ஆகியவை வழங்கியது.
மேலும் சாதாரண காய்ச்சல் வந்தால் அச்சப்படத் தேவையில்லை. பொதுமக்கள் சுத்தமாக இருக்க வேண்டும். கைகளை அவ்வப்போது கழுவ வேண்டும். இருபத்தியோரு நாட்கள் ஊரடங்கு உத்தரவை மாநில அரசுகள் அறிவித்தது. சோசியல் டிஸ்டன்ஸ் இருக்க வேண்டும்.
பொதுமக்கள் அதிகம் பேர் கூடி வருகிறார்கள். இது மிகப்பெரிய ஆபத்தாக உள்ளது. அனைவரும் மாஸ்க் போட்டு உள்ளார்கள். ஆக இருந்தாலும் இடைவெளி தேவை, மாஸ்க் தண்ணீர் பட்டால் உடனடியாக அதை அகற்ற வேண்டும். எட்டு மணி நேரம் மட்டுமே இந்த மாஸ்க் தாங்கும் சோசியல் டிஸ்டன்ஸ் முக்கியம் தேவை.
அரசு மருத்துவமனைக்கு உள்ளே வரும் போதும் போகும் போதும் கைகளை நன்றாக கழுவ வேண்டும். நாள் ஒன்றுக்கு 20 தடவை கையை கழுவ வேண்டும் என தெரிவித்தார். தாங்கள் இருக்கும் வீடுகளில் கிருமிநாசினி மருந்துகளை தெளித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...