தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கடலூரில் 107 பேருக்கு கரோனா: கோயம்பேட்டில் இருந்து சென்றவர்கள்

கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் சென்ற 107 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தகவல் தெரிவித்தார். 

News image
Updated On :4 மே 2020, 8:21 am

கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் சென்ற 107 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் தில்லி தப்லீக் ஜமாஅத் மாநாடு சென்று திரும்பிய 18 பேருக்கு முதலில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் அவர்களது குடும்பத்தினர் 8 பேருக்கு பரவியது. அனைவரும் சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் பணியாற்றி கடலூர் மாவட்டம் திரும்பிய 600 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு படிப்படியாக முடிவுகள் வெளியிடப்பட்டன. மே 2 ஆம் தேதி 7 பேருக்கும், 3 ஆம் தேதி 8 பேருக்கும் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 114 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் கோயம்பேடு சந்தை மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் 107 பேர். இதுதவிர மேலும் 7 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

இதனால் கோயம்பேடு சந்தை மூலமாக கடலூரில் இத்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக கடலூரில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூருக்கு வந்த 699 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 217 பேருக்கு இன்று பரிசோதனை முடிவுகள் வந்ததில், 107 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.