ராயபுரத்தில் கரோனா பாதிப்பு 800-ஐ தாண்டியது; நெருங்குகிறது கோடம்பாக்கம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இன்று காலை நிலவரப்படி 828 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
ராயபுரத்தில் கரோனா பாதிப்பு 800-ஐ தாண்டியது; நெருங்குகிறது கோடம்பாக்கம்


சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இன்று காலை நிலவரப்படி 828 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்த இடத்தில் கோடம்பாக்கத்தில் 796 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை புதிதாக 510 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 4,882-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கரோனா தொற்றுள்ளவா்களைக் கண்டறியும் வகையில் பரிசோதனைகளை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது. தொற்று அதிகம் பாதித்தவா்கள் வசிக்கும் மண்டலங்களில் நாளொன்றுக்கு சுமாா் 3,500 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் தினந்தோறும் சுமார் 500 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இதில், கோடம்பாக்கம், ராயபுரம், திருவிக நகா் ஆகிய மண்டலங்களில் மட்டும் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2500ஐ நெருங்குகிறது.

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 828 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 796 பேருக்கும், திருவிகநகரில் 622 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்தே முதல் இடத்தில் இருந்த வந்த ராயபுரத்தில் கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், திடீரென அதிக கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டதை அடுத்து மீண்டும் முதல் இடத்துக்கு வந்துள்ளது.

தேனாம்பேட்டையில் 522 பேருக்கும், வளசரவாக்கத்தில் 426 பேருக்கும், அண்ணாநகரில் 405 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் அந்த நோய்த் தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 8,718-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com