கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், வரும் 9 ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூட உள்ளது. காணொலி மூலம் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.
பொதுக்குழுவிற்கு பின் தி.மு.கவின் பலம் என்ன என்பது தெரியும். கரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. காணொலி காட்சி மூலமாக நடைபெற உள்ளதால் சிறப்பு அழைப்பாளர்களுக்கு இம்முறை அழைப்பு இல்லை. 2021 தேர்தலுக்கு திமுக எவ்வாறு தயாராகி இருக்கிறது என்பது களம் வரும்போது தெரியும் என்றார்.