திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து 5.10 மணிக்கு செப்புக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
அறுபடை வீடுகளில் 2 ஆவது படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆவணி திருவிழா இன்று தொடங்கி வருகின்ற செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
கொடியேற்றம் உள்ளிட்ட முக்கிய திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் https://youtu.be/MjiiXtXHNVI என்ற இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சா.ப.அம்ரித், தக்கார் ரா.கண்ணன் ஆதித்தன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்றாகும்.