நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

சிஜடியு தொழிற்சங்கத்தினர் மறியல்: 150 பேர் கைது

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, தருமபுரியில் சிஜடியு தொழிற்சங்கத்தினர் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

News image

தருமபுரியில் மறியலில் ஈடுபட்ட சிஜடியு தொழிற்சங்கத்தினர்.

Updated On :6 ஜனவரி 2021, 1:43 pm IST


தருமபுரி: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, தருமபுரியில் சிஜடியு தொழிற்சங்கத்தினர் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு  மாவட்டத் தலைவர் பி.ஜீவா தலைமை வகித்தார். மாநிலச் செயலர் சி.நாகராசன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஜி.நாகராஜன், சி.கலாவதி,
அங்கம்மாள், சண்முகம், முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில், விவசாயிகளுக்கு எதிரான‌ மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தங்களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.