சென்னை: சென்னையில் நேற்று நள்ளிரவில் பெய்யத் தொடங்கிய மழை, நாள் முழுவதும் தொடர்ந்து நின்று நிதானமாகப் பெய்தது. இதனால் நகரமே வெள்ளக்காடாக மாறியது.
ஜனவரி மாதத்தில் இப்படி மழை பெய்கிறதே என்று சென்னைவாசிகள் ஆச்சரியப்படும் அளவுக்கு நேற்று இடைவெளி விடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது.
தொடர்ந்து மழை பெய்ததால், தண்ணீர் தேங்காத சாலைகளில் கூட மழைநீர் சூழ்ந்து கொண்டது. போக்கிடம் இல்லாததால் எங்கு செல்வது என்று தெரியாமல் மழை நீர் சாலைகளில் சிக்கித் தவித்தது.
எவ்வளவு வெயிலையும் தாங்கும் சென்னைவாசிகளால், ஒரு சொட்டு மழை நீர் மண்ணில் விழுந்தால் கூட, நகரத்துக்குள் கால் வைக்க பயப்படும் சூழலே இதுவரை நீடிக்கிறது. ஒன்று சாலைகளில் தேங்கும் தண்ணீரும், காலைவாரக் காத்திருக்கும் குண்டு குழிகளும்.
சரி நேரடியாக விஷயத்துக்கு வரலாம். நேற்று சென்னையில் ஒட்டுமொத்தமாக 1353.60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்று காலை 9 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிண்டியில் 162.20 மி.மீ. மழையும் மாம்பலத்தில் 149.20 மி.மீ. மழையும் சோளிங்கநல்லூரில் 139 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
இதற்கடுத்து, மைலாப்பூரில் 138 மி.மீ. மழையும் அயனாவரத்தில் 128.20 மி.மீ. மழையும் பெரம்பூரில் 119 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கீழையூா் பெருமாள் கோயில் ஊஞ்சல் உற்சவம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வுக்கு மே 20 முதல் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

கங்கைகொண்டான் சுற்றுவட்டாரங்களில் இன்று மின்தடை

சீா்காழி கோயிலில் கோபூஜை வழிபாடு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

