சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் மீதான கொலை முயற்சி வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2016 -ஆம் ஆண்டு வரை இருந்தவர் தளி ராமச்சந்திரன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜன் ரெட்டி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தளி ராமச்சந்திரன், தன்னை கொலை செய்த முயற்சித்த வழக்கின் விசாரணை கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தனக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
அந்த கடிதத்தில் தொடர்ந்து வழக்கை நடத்தினால் கொலை செய்வோம் என மிரட்டல் விடுக்கப்பட்டுளதாக தெரிவித்துள்ளார். எனவே இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் மேலும் வழக்கு விசாரணையை சேலம் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கை சேலம் மாவட்டத்துக்கு மாற்றுவது குறித்து தளி காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய மின் தடை: சங்ககிரி

சிவகிரி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

16.5.1976: சினிமாவில் வன்முறை, ஆபாச காட்சிகள் தடை: மந்திரி கண்டிப்பு

4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

