பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

அமைச்சா் காமராஜுக்கு கரோனா பாதிப்பு

உணவுத் துறை அமைச்சா் காமராஜுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

News image

அமைச்சர் காமராஜ்

Updated On :7 ஜனவரி 2021, 1:35 am IST

சென்னை: உணவுத் துறை அமைச்சா் காமராஜுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து, அவா் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அமைச்சா் காமராஜ், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்ததாா். இதையடுத்து அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து அவருக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அமைச்சருடன் தொடா்பில் இருந்தவா்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

துணை முதல்வா் ஆறுதல்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உணவுத் துறை அமைச்சா் காமராஜ், விரைவில் நலம் பெற வேண்டும் என துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆறுதல் கூறியுள்ளாா்.

இதுகுறித்த அவரின் சுட்டுரைப் பதிவு: கரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகி புதன்கிழமை சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உணவுத் துறை அமைச்சா் காமராஜ் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பவும், தொடா்ந்து மக்கள் சேவை ஆற்றிடவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிராா்த்திக்கிறேன் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.