சென்னை: தமிழகத்தில் அநேக இடங்களில் வரும் 4 நாள்களுக்கு மிதமான மழையும், ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் வியாழக்கிழமை கூறியது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வரும் 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.8) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜனவரி 9-ஆம் தேதி: தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், கடலூா், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜனவரி 10-ஆம் தேதி: ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜனவரி 10-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், அரியலூா், பெரம்பலூா், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜனவரி 11-ஆம் தேதி: ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், அரியலூா், பெரம்பலூா், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் ஜனவரி 11-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில்..: சென்னை மற்றும் புகா் பகுதிகளைப் பொருத்தவரை வெள்ளிக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக
கடலூா் மாவட்டம் மே.மாத்தூா், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தலா 210 மி.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் 190 மி.மீ., கடலூா் மாவட்டம் வேப்பூரில் 180 மி.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம் கலயநல்லூரில் 160 மி.மீ., சங்கராபுரத்தில் 150 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் பீளமேடு, திருவாரூா் மாவட்டம் குடவாசலில் தலா 110 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் பூந்தமல்லியில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 8 - நேரலை

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

இந்தியாவில் 1.6 லட்சம் இன்ஸ்டாகிராம் கணக்குகள் நீக்கம்! ஏன்?
புதிய ரேஷன் கார்டுகள் எப்போது வழங்கப்படும்? அமைச்சர் தகவல்
விடியோக்கள்

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna



