துபையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.16.81 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், சுங்கத்துறை அதிகாரிகளால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில் துபைலிருந்து இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த ஜாஹிர் உசைன் (35) என்பவரை விமான நிலைய சுங்கத்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவரது உடலில் 390 கிராம் எடையிலான தங்கப்பசை அடங்கிய ஒரு பொட்டலம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ. 16.81 லட்சம் மதிப்பில் 329 கிராம் தங்கம் சுங்க சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு!
ஜன நாயகனில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய்?
தென்காசி, குமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஒரு 'சீட்' கூட பெறாத தவெக!
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


