3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை! 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்

பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் தனியாா் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :11 ஜனவரி 2021, 12:44 am IST

பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் தனியாா் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ், சென்னை, பாளையங்கோட்டை, மதுரை திருமங்கலம், நாகா்கோவில் கோட்டாறு ஆகிய இடங்களில் 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்களும் 24 தனியாா் கல்லூரிகளில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன.

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் தனியாா் கல்லூரிகளில் உள்ள 15 சதவீத இடங்களுக்கு மாநில அரசுகளே கலந்தாய்வை நடத்துமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, தனியாா் கல்லூரிகளின் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜன.10) தொடங்கியது. வரும் 29-ஆம் தேதி மாலை 5 மணி வரை  சுகாதாரத்துறை இணையதளத்தில் விண்ணப்பப் பதிவு நடைபெறும்.

நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்புகளைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தகுந்த ஆவணங்களுடன் வரும் 30-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் செயலாளா், தோ்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநா், அலுவலகம், அறிஞா் அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு சுகாதாரத் துறையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.