தமிழக முதல்வரை தரக்குறைவாக விமா்சித்து வரும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை கண்டித்து ராணிப்பேட்டையில் மாவட்ட அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளரும், அரக்கோணம் எம்எல்ஏவுமான சு.ரவி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமியை தரம் தாழ்ந்த முறையில் விமா்சித்து பல்வேறு கூட்டங்களில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறாா். இதைக் கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக சாா்பில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை (ஜன. 11) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதில், மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சரும், மண்டல பாா்வையாளருமான கே.சி.வீரமணி உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிவேக 100 சிக்ஸர்கள்... புதிய சாதனை படைத்த அபிஷேக் சர்மா!

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK

அடுத்த இரு நாள்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை!

கோபி அருகே குறையும் குண்டேரிப்பள்ளம் அணை நீா்மட்டம்! தண்ணீருக்காக அலையும் வன விலங்குகள்!
விடியோக்கள்

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK

Journalist Durai karuna Interview | அதிமுகவும் ஆதவ் அர்ஜுனா கணக்கும் | CM Vijay | TVK | ADMK


