சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா முன்னிட்டு 750 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலவீதியில் உள்ள நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு நகர தலைவர் தில்லை ஆர்.மக்கின் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்ட துணைத்தலைவர் ராஜா. சம்பத்குமார், மாவட்ட துணை தலைவர் எஸ்.கே.வைத்தி, மாவட்ட பொதுச்செயலாளர் பாபுஆர்.எஸ்.சந்திரசேகர் ,மாவட்ட தொண்டரணி தலைவர் தில்லை கோ.குமார் ,தொழிலாளர் பிரிவு மாநில துணை தலைவர் எம்.ஜி.ராஜராஜன், மாவட்ட மகளிரணி தலைவி கே.ராஜலெட்சுமி, நகர மூத்த துணைத் தலைவர் ஆர். சம்மந்தமூர்த்தி, முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் தில்லை விகுணா ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கடலூர் மத்திய மாவட்ட த.மா.கா தலைவர் எஸ்.புரட்சிமணி , மாநில பொதுச் செயலாளருமான எஸ் .ஜெயச்சந்திரன், மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சில்வர் பொங்கல் பானை, புடவை, போர்வை பாய், வெள்ளம் முந்திரி திராட்சை ஆகியவற்றை வழங்கினர். பின்னர் சிதம்பரத்தில் உள்ள கலைவாணர் நகர், விநாயகர் கோயில், ஓமக்குளம் அருகே உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் நகர பொருளாளர் எஸ்.எஸ்.நடராஜன், நகர துணைத் தலைவர்கள் ஆர்.வி.சின்ராஜ் ஜி.ஆறுமுகம் நகர பொதுச்செயலாளர்கள் ஆட்டோ டி.குமார், டி.பட்டாபிராமன், கீரை முருகன், மாநிலமருத்துவர் அணி மண்டல செயலாளர் டாக்டர். ஆர். வீரவேல், மாவட்ட செயலாளர் தில்லை.செல்வி, ஆர்.சுப்புலட்சுமி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் மீனாசெல்வம், செல்வி,கோ.ஜனகம், ஆர்.மாலா, ராதா, மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் நகர துணை தலைவர் என்.இளங்கோவன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே பேட்டிங்: சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக உர்வில் படேல்!

மே 1 முதல் சென்னையில் வெயில் சுட்டெரிக்கும்! தமிழ்நாடு வெதர்மேன்

தஞ்சை பெரிய கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பார்சிலோனா அசத்தல் வெற்றி: கோப்பை வெல்லும் போட்டியில் 11 புள்ளிகள் முன்னிலை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


