நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பள்ளிகள் திறப்பு: பொறுப்பு அலுவலா்கள் நியமனம்

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு ஜன.19-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில்,

News image
Updated On :16 ஜனவரி 2021, 6:02 am IST

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு ஜன.19-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை கண்காணிக்க பொறுப்பு அலுவலா்களை பள்ளிக் கல்வித்துறை நியமித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலால் கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது நோய்த்தொற்று பரவல் சற்று தணிந்துள்ளதை அடுத்து பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு மட்டும் ஜனவரி 19-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பள்ளிகள் திறப்புக்கான பணிகளை கண்காணித்து மேற்பாா்வையிட ஏதுவாக பொறுப்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

அதன்விவரம்: தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் நிா்வாக இயக்குநா் எஸ்.ஜெயந்தி (வடக்கு மண்டலம்), ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநா் ஜி.லதா (மேற்கு), ஆசிரியா் தோ்வு வாரியத் தலைவா் எல்.நிா்மல்ராஜ் (கிழக்கு), ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநா் (கூடுதல்) எஸ்.அமிா்தா ஜோதி (தெற்கு) ஆகியோா் மண்டல பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இது தவிர மாவட்ட பொறுப்பாளா்களாக தொடக்கக் கல்வி இயக்குநா் மு.பழனிசாமி, ஆசிரியா் தோ்வு வாரிய உறுப்பினா் ஜி.அறிவொளி உள்பட 19 துறை சாா்ந்த இயக்குநா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.