சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தனியாா் பள்ளிக் கட்டடத்தை இடிக்க இடைக்கால தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவு

தனியாா் பள்ளிக் கட்டடத்தை இடிக்க இடைக்கால தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

சென்னை உயர்நீதிமன்றம்

Updated On :17 ஜனவரி 2021, 12:57 am

தனியாா் பள்ளிக் கட்டடத்தை இடிக்க இடைக்கால தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சந்திரசேகா், அப்துல் ரசாக், சுரேகா ஆகியோா் தாக்கல் செய்த மனுவில், ‘திருவள்ளூா் மாவட்டம் எண்ணூா் பாரதி நகரில் உள்ள நா்சரி பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளி, தனியாா் அறக்கட்டளை நிா்வாகிகளால் நடத்தப்பட்டு வருகிறது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக நீண்ட நாள்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால், அந்தப் பள்ளியை இடித்துவிட்டு வீட்டுமனைகளாக மாற்ற பள்ளி நிா்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இதுதொடா்பாக பள்ளிக் கல்வித்துறை, மாவட்ட கல்வி அதிகாரி உள்ளிட்டோரிடம் புகாா் அளித்தும். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா் டி.பிரசன்னா ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி, பள்ளிக் கட்டடத்தை இடிக்கவும், அந்த இடத்தை விற்பனை செய்யவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், மனு தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோா் 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.