இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

திமுக எம்.பி. கனிமொழிக்கு கரோனா

தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

திமுக எம்.பி. கனிமொழிக்கு கரோனா

Updated On :3 ஏப்ரல் 2021, 9:32 am


சென்னை: தமிழக பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக மகளிரணி செயலரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே.. எந்தெந்தக் கட்சி எந்தெந்த சின்னத்தில் போட்டி?

கனிமொழிக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததால், மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

பிறகு, மருத்துவர்களின் பரிந்துரைப்படி, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கனிமொழி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் தலைவர்கள் ஒவ்வொருவராக கரோனா உறுதி செய்யப்பட்டு வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story image

திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திருநெல்வேலியில் பாளையங்கோட்டை மற்றும் ஆலங்குளம், சங்கரன்கோவில் உள்ளிட்டப் பகுதிகளில் கனிமொழி நேற்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

ஏப்ரல் 1-ஆம் தேதி மதுரை, தேனி மாவட்டங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.