தமிழகத்தில் 3 மணி நிலவரப்படி 53.35% வாக்குப்பதிவு
பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி 53.35 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.


தமிழக சட்டப்பேரவைக்கு இன்று காலை தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி 53.35 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நிலவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி 2 மணி நேரத்துக்கு ஒரு முறை அறிவித்து வருகிறார்.
அதன்படி, இன்று பிற்பகல் 3 மணியளவில் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 53.35 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 59.73 சதவிகித வாக்குப் பதிவும், குறைந்தபட்சமாக நெல்லையில் 41.58 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. சென்னையில் இதுவரை 46.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. எங்கும் பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை. அதுபோல வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்படின் உடனடியாக சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
எந்தச் சின்னத்தில் வாக்களித்தாலும் பாஜகவுக்கு வாக்குப்பதிவாவதாக சில பகுதிகளில் புகார் எழுந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழகத்தில் அதுபோன்ற புகார் எங்குமே பதிவாகவில்லை என்று பதிலளித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட வாக்குப் பதிவு நிலவரம் பகல் 3 மணி. அரக்கோணம்: 56.02%, சோளிங்கர்: 64.19%, ராணிப்பேட்டை: 60.35%, ஆற்காடு: 64.67%.
குமரி மாவட்டத்தில் 51.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மாவட்டத்தின் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பிற்பகல் 3 மணி வரை பதிவான வாக்குகள் விவரம்: கன்னியாகுமரி 52.56%, நாகர்கோவில் 55.43%, குளச்சல் 48.01 %, பத்மநாபபுரம் 50.91 %, விளவங்கோடு 49.54 %, கிள்ளியூர் 50.12 %, மாவட்ட சராசரி 51.16 %.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் மாலை 3 மணி நிலவரப்படி 58.08 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் 53.95, ஈரோடு மேற்கு 58.16, மொடக்குறிச்சி 61.34, பெருந்துறை 55.8, பவானி 62.6, அந்தியூர் 56.25, கோபி 62.76, பவானிசாகர் தொகுதியில் 53.4 சதவீத வாக்குகள் பதிவானது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 3.00 நிலவரப்படி சராசரி வாக்கு பதிவு 50.35%. பரமக்குடி- 49.57%, திருவாடானை- 50.81%, இராமநாதபுரம்- 50.48%, முதுகுளத்தூர்- 50.44%.
தேனி மாவட்டத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரி வாக்கு பதிவு 54.57%. ஆண்டிபட்டி தொகுதி - 56.17%, பெரியகுளம்- 54.66%, போடிநாயக்கனூர்- 51.21%, கம்பம்- 56.19%.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிற்பகல் மூன்று மணி வரை உதகையில் 49.42 சதமும் குன்னூரில் 52.73 சதமும் கூடலூரில் 54.61 சதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் 3 மணி நிலரப்படி வாக்குப்பதிவு விவரம்: மாவட்ட அளவில் 55.5%.
பழனி - 55.5, ஒட்டன்சத்திரம் - 61.5, ஆத்தூர் - 53.17, நிலக்கோட்டை - 59.6, நத்தம் -55.54, திண்டுக்கல் - 51.1, வேடசந்தூர் - 53.36.
சிவகங்கை மாவட்டத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 56.38 சதவீத வாக்குகள் பதிவாகின.
காரைக்குடியில் 58.06 சதவீத வாக்குகள் பதிவாகின. திருப்பத்தூர் தொகுதியில் 58.23 சதவீதமும், சிவகங்கை தொகுதியில் 56.10 சதவீதமும், மானாமதுரை (தனி) தொகுதியில் 53.10 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் 3 மணி நிலவரப்படி சராசரி வாக்கு பதிவு 48.59%.
திருநெல்வேலி- 49.76%, அம்பாசமுத்திரம்- 49.78%, பாளையங்கோட்டை- 45.67%,
நாங்குநேரி- 50.07%, ராதாபுரம்-47.69%.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 மணி நிலவரப்படி சராசரி வாக்குப் பதிவு 54.13%.
ஊத்தங்கரை 53%, பர்கூர் 55%, கிருஷ்ணகிரி 61%, வேப்பனஹள்ளி 53%, ஓசூர் 45%, தளி 61%.
தருமபுரி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிவாரியாக வாக்குப்பதிவு:
பாலக்கோடு- 61.32-%, பென்னாகரம் - 60.22%, தருமபுரி- 61.84%, பாப்பிரெட்டிப்பட்டி-61.70%, அரூர் (தனி)- 66.60%.
சூலூர் சட்டப்பேரவை தொகுதியில் மாலை 3 மணி வரை 56.37 சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...