போடி: போடி அருகே தேனி மக்களவை உறுப்பினரின் காரை அடித்து நொறுக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தேனி எஸ்.பி. தலைமையில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

போடி சட்டப் பேரவை தொகுதி தேர்தலில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதைத் தொடர்ந்து அவரது மகளான மக்களவை உறுப்பினர் ஓ.ப.ரவீந்திரநாத் வாக்குச்சாவடிகள் ஆய்வு செய்தார்.
போடி பெருமாள் கவுண்டன்பட்டியில் வாக்குச் சாவடியை ஆய்வு செய்ய ஊருக்குள் நுழைந்த போது திடீரென நாலாபக்கமிருந்தும் கற்களால் சிலர் அவரது காரை தாக்கினர்.

இதில் அவரது காரின் முன்பக்கம், பின் பக்கம், பக்கவாட்டு கண்ணாடிகள் சேதமடைந்தன. சத்தம் கேட்டு அவருடன் பாதுகாப்புக்கு வந்த தொண்டர்கள் இறங்கி வருவதற்குள் கற்களை வீசிய மர்ம நபர்கள் தப்பி விட்டனர்.

இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து தேனி எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி, போடி டி.எஸ்பி. பார்த்திபன் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
அதனையடுத்து வேறு வாகனத்தில் மக்களவை உறுப்பினர் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார். காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வருவாய்த் துறை கூட்டமைப்பினா் மறியல்: 327 போ் கைது

அழகுக்கலை பயிற்சி பெற்ற திருநங்கையரின் அழகு நிலையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

குடிநீா் கோரி பெண்கள் குடங்களுடன் சாலை மறியல்
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

