மதுரை: 3,856 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு துவக்கம்
மதுரை மாவட்டத்தின் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 3856 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது.


மதுரை: மதுரை மாவட்டத்தின் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 3856 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது.
மேலூர் மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மையம், மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
மாவட்டத்தில் 26 லட்சத்து 97 ஆயிரத்து 682 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் இவர்களில் ஆண்கள் பதிமூன்று லட்சத்து 26 ஆயிரத்து 687 பேர். பெண்கள் பதிமூன்று லட்சத்து 70 ஆயிரத்து 791 பேர் மூன்றாம் பாலினம் 204 பேர்.
மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் மொத்தம் 168 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் இதில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் 79 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் 89 பேர். அதிகபட்சமாக திருமங்கலம் தொகுதியில் 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் குறைந்த எண்ணிக்கையாக மதுரை தெற்கு தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
சோழவந்தான் திருமங்கலம் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் 15 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடுவதால் இரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது முன்னதாக வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு அதில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை முகவர்களிடம் காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு தொடங்கியது காலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வந்திருந்தனர்.
வாக்குச்சாவடிக்கு முன்பாக அனைத்து வாக்காளர்களுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது கை சுத்திகரிப்பான் திரவம் மற்றும் கையுறை வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 3856 வாக்குச்சாவடிகளில் 1330 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை யாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் காமிரா பொருத்தப்பட்டு இணைய வழியாக கண்காணிக்கப்படுகிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...