6 மணிக்கு மேல் பொதுமக்களும் வாக்களிக்கலாம்: சாஹு
வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் மாலை 6 மணிக்கு மேலும், வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.


வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் மாலை 6 மணிக்கு மேலும், வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம் என்றும், அதன் பிறகு கரோனா நோயாளிகள் வாக்களிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களும் மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் சத்யபிரத சாஹு பேசியதாவது, சாதாரண மக்கள் வாக்களித்த பின்னர் கரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம். பொதுமக்கள் வாக்களிக்க முதலில் முன்னுரிமை வழங்கப்படும்.
வாக்குச்சாவடிகளில் டோக்கன் பெற்று 6 மணிக்கு மேலும் வாக்களிக்கலாம். அதன் பிறகு கரோனா நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...