அதிகளவில் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
தமிழகம், புதுச்சேரி, கேரளம் சட்டப்பேரவைகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.


புது தில்லி: தமிழகம், புதுச்சேரி, கேரளம் சட்டப்பேரவைகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி சுமார் 5 மணி நேரமாக அமைதியான முறையிலும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழக மற்றும் புதுச்சேரி மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது சுட்டுரைப் பக்கத்தில், தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன் என்றும்,
புதுச்சேரி மக்களுக்கு, "இன்று நடைபெறும் தேர்தலில் அதிகளவில் வாக்களிக்குமாறு புதுச்சேரி மக்களை கேட்டுக் கொள்கிறேன்" என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...