திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் வெளியூருக்குச் செல்ல பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்.


திருப்பூர்: திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் வெளியூருக்குச் செல்ல பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து கரூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி திருப்பூரிலிருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்க எண்ணியிருந்தனர்.
அதற்காக திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாலை முதல் பேருந்துக்காக காத்திருந்தனர். 5 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் பேருந்துகள் வராத காரணத்தால் புதிய பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றது. போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருப்பூர் வடக்கு காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...