கரோனா அறிகுறி இருந்தால்..: சென்னை மாநகராட்சி ஆணையரின் ஆலோசனை

காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.
கரோனா அறிகுறி இருந்தால்..: சென்னை மாநகராட்சி ஆணையரின் ஆலோசனை
கரோனா அறிகுறி இருந்தால்..: சென்னை மாநகராட்சி ஆணையரின் ஆலோசனை
Published on
Updated on
1 min read


சென்னை: காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை பாலவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த கோ. பிரகாஷ் கூறுகையில், தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியுள்ள அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். தேர்தல் காரணமாக தடுப்பூசி போட்டுக் கொளவோரின் எண்ணிக்கைக் குறைந்தது. தற்போது மீண்டும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

வீடு தேடி வரும் முன்களப் பணியாளர்களிடம் காய்ச்சல் உள்ளிட்ட விவரங்களை மறைக்காமல் சொல்லுங்கள். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பிறப்பித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடியுங்கள்.

சென்னையில் காய்ச்சல் முகாம்கள் படிப்படியாக அதிகரிக்கப்பட உள்ளது. தடுப்பூசி போடுவதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கட்டாயமாக இரண்டாவது தவணையைப் போட்டுக் கொள்ள வேண்டும். இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டால்தான் முழுமையாக பலனைத் தரும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.