துரைமுருகனின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக பொதுச் செயலாளா் துரைமுருகனின் உடல்நிலை சீராக உள்ளதாக ரேலா மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.


கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக பொதுச் செயலாளா் துரைமுருகனின் உடல்நிலை சீராக உள்ளதாக ரேலா மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
திமுக பொதுச் செயலாளா் துரைமுருகனுக்கு நேற்றைய பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரேலா மருத்துவமனை, 'துரைமுருகனின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது' என்று தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சட்டப்பேரவைத் தேர்தலில் வேலூா் மாவட்டம்- காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகன், பிரசாரத்தின்போதே கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...