வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

குமாரபாளையத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: உறவினர் உள்பட 11 பேர் கைது

குமாரபாளையத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த உறவினர் உள்பட 11 பேரை மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொருவரைத் தேடி வருகின்றனர்.

News image
குமாரபாளையத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
Updated On :27 ஜனவரி 2024, 8:00 pm

DIN

குமாரபாளையத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த உறவினர் உள்பட 11 பேரை மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொருவரைத் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது தாய் மற்றும் இரு சகோதரிகளுடன் வசித்து வந்தார். 6-ம் வகுப்பு படித்துள்ள இச்சிறுமி  குடும்ப வறுமை காரணமாக  வீட்டு வேலைகளுக்குச் சென்று வந்துள்ளார். இச்சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் உள்பட பலர் பாலியல்  தொல்லை கொடுத்து வந்துள்ளனர். 

இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் விசாரணை நடத்திய குழந்தைகள் நல அலுவலர்கள் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தன்னை பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டோர் குறித்துத் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து 12 பேரின் பெயர்களைப் பட்டியலிட்ட அச்சிறுமி அளித்த தகவலைக் கேட்டு மகளிர் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, திங்கள்கிழமை இரவு சிறுமியை பாலியல் தொல்லைக்கு உட்படுத்திய 11 பேரை மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவான மற்றொருவரைத் தேடி வருகின்றனர்.

14 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குமாரபாளையம் பகுதியில் 11 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.