47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காரைக்கால் திமுக வேட்பாளருக்கு கரோனா

காரைக்கால் தெற்குத் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிமுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
திமுக வேட்பாளர் ஏ.எம்.எச்.நாஜிம்
Updated On :13 ஏப்ரல் 2021, 9:32 am

DIN

காரைக்கால் தெற்குத் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிமுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக காரைக்கால் தெற்குத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் அவர் ஈடுபட்டுவந்தார். 

தேர்தல் பணிகள் நிறைவடைந்த சூழலில், கடந்த சில நாள்களாக உடல் சோர்வாக காணப்பட்ட நிலையில், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் செய்துகொண்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சென்னை சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை சேர்ந்தார்.

காரைக்கால் மாவட்டத்தில் வேட்பாளர் நிலையில் 2 பேர் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 11-ஆம் தேதி நெடுங்காடு (தனி) தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அ.மாரிமுத்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது நினைவு கூரத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.