வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தமிழகத்தில் இன்று முதல் 3 நாள்களுக்கு கரோனா தடுப்பூசி திருவிழா

தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு கரோனா தடுப்பூசி திருவிழா நடைபெறவுள்ளது. 

News image
Updated On :14 ஏப்ரல் 2021, 3:05 am

DIN

தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு கரோனா தடுப்பூசி திருவிழா நடைபெறவுள்ளது. 

நாடு முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 11 முதல் 14 வரை தடுப்பூசி திருவிழா நடத்த அறிவுறுத்தியிருந்தது. 

இதையொட்டி, தமிழகத்தில் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. 

அதன்படி இன்று முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

தற்போது அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், நகர்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக்குகள், தனியார் மருத்துவமனைகள் என 4,328 மையங்கள் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு 25 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்குமேல் உள்ள அனைவருக்கும் 100 விழுக்காடு தடுப்பூசி போடும் பணியை இந்த நாள்களில் முடிக்க அரசு முடிவெடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.