இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்புகிறார் துரைமுருகன் 

கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் உடல் நிலை சீராக உள்ள நிலையில் இன்று அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகிறார்.

News image
மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்புகிறார் துரைமுருகன் 
Updated On :14 ஏப்ரல் 2021, 5:31 am

DIN

சென்னை: கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் உடல் நிலை சீராக உள்ள நிலையில் இன்று அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகிறார்.

வேலூா் மாவட்டம் - காட்பாடி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட துரைமுருகனுக்கு கடந்த வாரம் உடல்நிலை பாதிக்கப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் அவா், சென்னையில் உள்ள தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அவா் கடந்த வாரம் இறுதியில் குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பு: கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனின் உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த துரைமுருகனின் உடல்நிலை சீரடைந்த நிலையில் இன்று அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.