புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அம்பேத்கர் வழியில் தமிழக மக்களுக்கு திமுக கடமையாற்றும்: மு.க.ஸ்டாலின்

அம்பேத்கர் வழியில் தமிழக மக்களுக்கு திமுக கடமையாற்றும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

News image

சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்

Updated On :14 ஏப்ரல் 2021, 4:44 am

DIN

அம்பேத்கர் வழியில் தமிழக மக்களுக்கு திமுக கடமையாற்றும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

சட்டமேதை அம்பேத்கரின் 130 ஆவது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அம்பேத்கரை நினைவு கூர்ந்து அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

அந்தவகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்பேத்கர் வழியில் தமிழக மக்களுக்கு திமுக நிச்சயம் கடமையாற்றும். தாழ்த்தப்பட்ட. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் அம்பேத்கர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

அதேபோன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.