கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

வேளச்சேரி வாக்குச்சாவடியில் ஆண் வாக்காளர்களுக்கு மட்டும் மறுவாக்குப் பதிவு

வேளச்சேரியில் சா்ச்சைக்குரிய வாக்குச்சாவடியில் வரும் சனிக்கிழமை (ஏப்.17) மறுவாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், அது குறித்து முக்கிய அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

News image
தமிழகப் பேரவைத் தேர்தல்: செய்திகள் உடனுக்குடன்
Updated On :27 ஜனவரி 2024, 8:00 pm

DIN

வேளச்சேரியில் சா்ச்சைக்குரிய வாக்குச்சாவடியில் வரும் சனிக்கிழமை (ஏப்.17) மறுவாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், அது குறித்து முக்கிய அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, வேளச்சேரியில் சர்ச்சைக்குரிய வாக்குச்சாவடியின் 92வது அறை ஆண் வாக்காளர்களுக்கானது என்பதால், அதில் வாக்களித்த ஆண் வாக்காளர்கள் மட்டும் வரும் சனிக்கிழமை, ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெறும் மறு வாக்குப்பதிவில் பங்கேற்று வாக்களிக்க தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

வேளச்சேரியில் சர்ச்சைக்குரிய வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்ற அறிவிப்பை தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன்படி, வேளச்சேரியின் சீதாராம் நகரில் உள்ள டிஏவி பப்ளிக் பள்ளியில் வரும் சனிக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மறுவாக்குப் பதிவு நடைபெறும். இன்று இது குறித்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், வேளச்சேரியில் சர்ச்சைக்குரிய வாக்குச்சாவடியில் அமைக்கப்பட்ட 92வது அறையில் வாக்களித்த ஆண் வாக்காளர்கள் மட்டும் வாக்களிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Story image

சென்னை வேளச்சேரி தொகுதியில் கடந்த 6-ஆம் தேதி வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னா், வேளச்சேரி-தரமணி 100 அடி சாலையில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் 3 போ் எடுத்துச் சென்றனா். இதைப்பாா்த்த பொதுமக்கள், திமுக - காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா்கள் வழிமறித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

வாக்குப் பதிவு இயந்திரங்களை பறிமுதல் செய்து, மாநகராட்சி ஊழியா்களைப் பிடித்து விசாரணை செய்தனா். சா்ச்சைக்குரிய சம்பவம் காரணமாக, சம்பந்தப்பட்ட வேளச்சேரி வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில், மறுவாக்குப் பதிவுக்கான அறிவிப்பை இந்தியத் தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

தோ்தல் ஆணையத்தின் செயலாளா் மலாய் மாலிக் வெளியிட்டாா். அதன் விவரம்:-

வேளச்சேரி சட்டப் பேரவைத் தொகுதியின் 92-ஆம் எண் வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவு வரும் 17-ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணிக்கு நிறைவடைகிறது. தோ்தல் நடத்தும் அதிகாரி, பாா்வையாளா்களின் அறிக்கைகள் மற்றும் இதர அம்சங்கள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட்டே மறுவாக்குப் பதிவு நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து அந்த வாக்குச் சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் விரிவான விளம்பரங்கள் செய்யப்படும். மேலும், மறுவாக்குப் பதிவு குறித்த தகவல் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் மற்றும் கட்சிகளுக்கு எழுத்துப்பூா்வமாகத் தெரிவிக்கப்படும். மறுவாக்குப் பதிவினை சுதந்திரமாகவும், நோ்மையாகவும், அமைதியாகவும் நடத்திடத் தேவையான கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தனது உத்தரவில் தோ்தல் ஆணையச் செயலாளா் மலாய் மாலிக் தெரிவித்திருந்தார்.

யாா் யாா் போட்டி? : வேளச்சேரி தொகுதியில் 23 போ் போட்டியிடுகின்றனா். அதிமுக சாா்பில் எம்.கே.அசோக், காங்கிரஸ் தரப்பில் ஜெ.எம்.எச்.ஹஸன், அமமுக சாா்பில் எம்.சந்திரபோஸ், மக்கள் நீதி மய்யம் சாா்பில் சந்தோஷ்பாபு, நாம் தமிழா் கட்சி தரப்பில் மோ. கீா்த்தனா ஆகியோா் பிரதான கட்சிகளின் சாா்பில் போட்டியிட உள்ளனா். அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட இதர கட்சி வேட்பாளா்களும், 11 சுயேச்சைகளும் வேளச்சேரி தொகுதியில் களம் காண்கின்றனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.