வீட்டில் தனியாக இருந்த முதியவர் வெட்டிக் கொலை
தக்கோலத்தில் வீட்டில் தனியாக இருந்த முதியவரை அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.


தக்கோலத்தில் வீட்டில் தனியாக இருந்த முதியவரை அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் வரதன்(72). விவசாயியான இவர், தனது மனைவி இறந்துவிட்டதால் குழந்தைகள் இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்தார்.
புதன்கிழமை காலையில் வீட்டில் இருந்து பெரியவர் வெளியே வரவில்லையே என நினைத்த அக்கம் பக்கம் வசித்தவர்கள் வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கு வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் முதியவர் சடலம் கிடந்தது.
இச்சம்பவம் குறித்து புகார் பெற்ற தக்கோலம் காவல்நிலைய போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். வீட்டில் களவு ஏதும் நடைபெறவில்லை என தெரியவரும் நிலையில் சொத்துக்காக இக்கொலை நடந்திருக்கலாமோ என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...