நெல்லையில் சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு கரோனா பரிசோதனை
திருநெல்வேலி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு பாதுகாப்புக்காக வந்துள்ள சிஆர்பிஎப் வீரர்களுக்கு கரோனா பரிசோதனை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.


திருநெல்வேலி: திருநெல்வேலி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு பாதுகாப்புக்காக வந்துள்ள சிஆர்பிஎப் வீரர்களுக்கு கரோனா பரிசோதனை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அன்பு தலைமையில், 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில், உதவி கமாண்டர் முகமது பயாஸ் தலைமையில் 92 சிஆர்பிஎப் வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது திருநெல்வேலியில் கரோனா பாதிப்பின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், புதிதாக வந்துள்ள 92 சிஆர்பிஎப் வீரர்களுக்கும் திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் அனைவருக்கும் ஏற்கெனவே கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...